Kg / Mw / Zahira National College

Prefect's Board

83443863_188217645573176_4829547909597386283_n.jpg

 

கலையகம் ஸஹிரா நம் தாயே

கவினுறு புகழொடு திகழ்வாயே

 
(கலையகம் )
 
திருமறை வழிமுறை கற்றிடுவோம்.
திருநபி வழி பின் பற்றிடுவோம்.
கருணையும் பொறுமையும் பெருகிடவே
கடலென வரும் துயர் வென்றிடுவோம்.
 
(கலையகம்)
 
அறிவியல் அரசியல் கற்றிடுவோம்.
அழகியல் பல கலை கற்றிடுவோம்.
அகிலத்தை வென்றிட வழியமைப்போம்.
 அல்லாஹ் அருள்தனை வேண்டிடுவோம்.
 
(கலையகம்)
 
மலைபல வளமிகு மாவனல்லை
மருவிய கலையகம் ஸஹிராவே
மலைதனில் சுடரெனத் திகழ்ந்திடவே
 மறைதரும் இறைவனை வேண்டிடுவோம்.


(கலையகம் )